நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்!

0
225

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வைத்து இரு விமானங்களும் நடுவானில் மோதிக்கொண்டதன் காரணமாக, இரு விமானங்களும் துறைமுகம் அருகே விழுந்து கடலில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துறைமுக நுழைவு பகுதி அமைந்துள்ள இடத்தில் இருந்து 2 மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மூழ்கிய இந்த விமானத்தை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்களும், மீட்புகுழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

90 அடி ஆழமுள்ள அந்த கடற்பரப்பில் அடியில் விமானங்கள் விழுந்து கிடக்கலாம் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

இதில், ஒரு விமானத்தில் வயதான இரண்டு ஆண்களும், மற்றொரு விமானத்தில் வயதான ஒரு பெண்மணியும் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Beechcraft என்ற விமானத்தின் உதவியுடன் இரண்டு ஆண்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் அப்பெண்மணியை காணவில்லை என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY