உயிா்வாழ சிறுநீரக (கிட்னி) சத்திர சிகிச்சைக்காக உங்களிடம் உதவி கோரும் செம்மண்னோடை, வாழைச்சேனையில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தகப்பன் !

0
226

MPCS.வீதி, செம்மண்னோடை, வாழைச்சேனை என்னும் முகவாியில் வசித்து வரும் ஜனாப். AH. லாபீா் (Van Driver) என்பவா் தனது இரண்டு கிட்னியும் முற்றாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்காக போராடி வருகிறாா்.

இவரைப்பரிசோதித்த கண்டியைச் சேர்ந்த வைத்திய நிபுணா் டாக்டா். AWM. வாஸீல் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணா் டாக்டா். றுஸ்த்தி நிசாம் ஆகியோா் இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படல் வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளதுடன் சத்திர சிகிச்சைக்காக ரூபா. 25 இலட்சம் செலவாகுமெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வறிய குடும்பப் பின்னணியைக்கொண்ட குறித்த சகோதரர் சாரதியாக வாகனம் ஓட்டியே தனது குடும்பச் செலவுகளை முன்னெடுத்து வந்தார். எனினும், கடந்த ஒரு வடத்திற்கு மேலாக நீரழிவு நோயால் பீடிக்கப்பட்டுள்ளமையால் தொழில் செய்யமுடியாத நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருகின்றார்.

அன்றாட வீட்டுச் செலவுக்கே கஷ்டப்படும் குறித்த சகோதரர் தனது சத்திரசிகிச்சைக்காக பணம் திரட்டமுடியாது கவலையுடன் காணப்படுகின்றார். இதனால், நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் உதவியை அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.

எனவே, கருணையுள்ளம் கொண்டவா்கள் இவருக்கு உதவிபுரியுமாறு தயவாய் வேண்டுகின்றோம்.

அத்துடன் ‘A’ அல்லது ” O” குரூப் இரத்த வகை உடைய சிறுநீரக தானம் செய்ய விரும்புவோா் தயவுசெய்து பின்வரும் செல்போன் இலக்கங்களுடன் தொடா்புகொள்ளுமாறு தயவாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

வங்கிக் கணக்கிலக்கம் –

S.H.S. JAZEENA
People’s Bank,
Ac/No. 340200170001593
Oddamavadi Branch

மேலதிக விபரங்களுக்கு :-
1. ஆகிப் (மகன்) 071 – 9926405
2. Jameel (உறவினா்) 077-9115377
” உயிா்வாழ உதவுங்கள் “

LEAVE A REPLY