சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரம் பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்

0
200

சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக அலெப்போ நகரில் சண்டை உக்கிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த நகரில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

அண்டை நாடான துருக்கியின் பிரதமர் அகமது தாவுடக்லு, இதுபற்றி கூறுகையில், “சிரியாவில் இருந்து துருக்கி எல்லையை நோக்கி சுமார் 70 ஆயிரம் பேர் வந்து கொண்டிருக்கின்றனர்” என்றார். ஆனால் கண்காணிப்பு அமைப்பு ஒன்று, 40 ஆயிரம் பேர் அலெப்போ நகரில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறுகிறது.

அலெப்போ நகரில், ரஷியாவின் வான்தாக்குதல்கள், சிரிய அதிபருக்கு ஆதரவான படைகள் முன்னேறுவதற்கு துணை புரிவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு தரைப்படையை அனுப்ப சவுதி அரேபியா தயாராக இருப்பதாக அதன் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.

LEAVE A REPLY