ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் வருகை இன்று!

0
206

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் (Zeid Ra’ad Al Hussein) இன்று (06) இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது.

இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ள இவர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரையான சுமார் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு விடுத்த அழைப்பிற்கு ஏற்ப, அல் ஹூசெய்ன் இலங்கைக்கு வரவுள்ளார். நாட்டுக்கு வருகை தரவுள்ள அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உள்ளிட்ட முக்கிய ஆளும் கட்சி பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்புக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY