தென் மாகாண முதலமைச்சர் முன் பிணையில் விடுதலை

0
214

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா நீதிமன்றில் முன்னிலையானதையடுத்து முன் பிணையில் அவரை விடுவிப்பதற்கு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அச்சுறுத்தியதாக அக்மீமன பொலிஸாரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் முதலமைச்சர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் கடந்த 03ம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடு சென்றிருந்ததனால் அவருக்கு நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என்று நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து நீதவான் முதலமைச்சரை முன் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

-AD-

LEAVE A REPLY