வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் துண்டுபிரசுரங்கள்

0
228

இன்று (05) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவினால் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் துண்டுபிரசுரங்கள் இன்றைய ஜூம்மா பள்ளிவாயல்களில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

குறித்த துண்டுப்பிரசுரித்தில் உள்வாங்கப்பட்டவைகள்: பொலிசார் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் உயிரை காப்பதற்காகவே, அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அவர்களுடன் முரண்படுவதும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சிப்பதும் சிபாரிசுகள் மூலம் சட்டத்தை மீற முயற்சிப்பதும் தவிர்த்து சட்டத்தை மீறுவோருக்கு உபதேசம் செய்வதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்ற முடியும் ஆகவே சட்டத்தை மீறுவோருக்கு இதனை உபதேசம் செய்யுங்கள்.

எந்த வித மோட்டார் சைக்கிள்களையும் சிறுவர்களிடம் ஓடக்கொடுக்க வேண்டாம். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து செல்லவும். மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் ஒருபக்கம் காலை வைத்துக்கொண்டு செல்லாமல் இரண்டுபக்கமும் காலை வைத்துச்செல்லவும். மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியின் மேல் பிள்ளைகளை ஏற்றிச்செல்ல வேண்டாம். சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களிடம் மோட்டார் சைக்கிள்களை ஓடக்கொடுக்க வேண்டாம். மது போதையில் மோட்டார் சைக்கிள்கள் ஓட்ட வேண்டாம் அது ஆபத்து. உள்வீதிகள் காபட் கொங்ரீட் வீதி போடப்பட்டுள்ளதால் உள்வீதி என்று தலைக்கவசமில்லாமல் செல்ல வேண்டாம் . உள் வீதிகளில்தான் அதிகமான விபத்துக்கள் ஏற்படுகின்றது. வாகன சாரதிகள் வீதி அருகில் வீதி சம்மந்தமான விளக்க குறியீடுகள் போடப்பட்டுள்ளதா என அவதானித்து வாகனத்தை செலுத்தவும். முச்சக்கரவண்டி சாரதிகள் பாடசாலை பிள்ளைகளை ஏற்றிச்செல்லும் பொது மேலதிகமான பிள்ளைகளை ஏற்றிச்செல்ல வேண்டாம். பாதசாரிகள் வீதியைக்கடக்கும் பொது அருகிலுள்ள மஞ்சள்கோட்டினால் கடக்கவும் . பொதுமக்கள் செறிந்து வாழும் பிரதேசம் என்பதால் சாரதிமார் வாகனத்தின் வேகத்தை குறைத்து அவதானமாக செல்லவும். வாகன சாரதிமார் வீதி ஒழுங்குமுறை சட்டத்தை கடைப்பிடித்து பேணுமாறும் கேட்டுக்கொள்கின்றேன் . அதை மீறி செல்வதால் இவ்வருடம் 11 மாதங்களுக்கும் 11 பேர் அக்கரைப்பற்று போலிஸ் பிரிவில் மரணமடைந்துள்ளனர். மின்சாரத்தில் (சார்ஜர்) மோட்டார் சைக்கிள்களையும் கட்டாயம் பதிவு செய்வதுடன் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து செல்வது அவசியம்.

சப்னி-

LEAVE A REPLY