அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம்

0
249

அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் பற்றிய கலந்துரையாடல் நேற்று (04-02-2016)  கல்குடா மஜ்லிஸ் MPCS வீதியிலமைந்துள்ள அமெரிக்கன் கொலீஜ் ( ACCIS CAMPUS)  மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில்  துரைசார் வல்லுனா்கள் , புத்தி ஜீவிகள், உலமாக்கள்,  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்  கலந்துகொண்டு ஆக்கபூா்வமான கருத்துக்களை வழங்கினா். தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள யாப்பு திருத்த நடைமுறையானது, கடந்த கால யாப்புத் திருத்தங்களைப் போலல்லாது இலங்கையின் அரசியல் சாசனத்தில் பரவலான மாற்றங்களை உட்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் இந்த யாப்புத் திருத்தங்கள், குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும் ஏனைய சிறுபான்மை மக்களைப் பொறுத்த வரையிலும் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மற்றும் எதிர்கால சமூகவியல் நோக்கிலும் எவ்வாறான விளைவுகளையும் தாக்கங்களையும் உருவாக்கும் என்பது பற்றி இங்கு முதற்கட்டமாக கலந்துரையாடப்பட்டது.

அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் சிவில் சமூக நிறுவனங்கள், சமூக ஆா்வலா்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுடனுமான கலந்துரையாடல்களை நடாத்தி அவர்களின் ஆலோசனைகளோடும் ஒத்துழைப்போடும் தொடர்ச்சியான விழிப்பணர்வுத் திட்டங்களை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலின் இறுதியில் இப்பணியை முன்னெடுப்பதற்காக கல்குடா மஜ்லிஸ் ஷுரா சபையின் அரசியல் உப பிரிவுடன் இணைந்து  13பேரைக்கொண்ட குழுவொன்று  தொரிவு செய்யப்பட்டது.

இவ்விசேட குழுவினூடாக இப்பணியை முன்னெடுப்பதற்கும் தீா்மானிக்கப்பட்டது. இதன்படி சிறுபான்மையோர் குறித்து அதிக கரிசனைக்குரிய விடயங்கள் தொடா்பில் அபிப்பிராயங்கள் கோரப்படுகின்றன. இது தொடர்பான அபிப்பிராயங்களை தெரிவிக்க விரும்புவோர், கீழ்வரும் முகவரிக்கு தமது அபிப்பிராயங்களை அனுப்பிவைக்க முடியும். அல்லது தமது அபிப்ராயங்களை வாய்மொழி மூலமாகவே அல்லது எமது முன்னெடுப்புக்களுக்கு ஆலோசனைகள் தர விரும்பினாலே எம்மை நேரில் சந்திக்கவும் முடியும்.

மின்னஞ்சல் majlisussoorahkalkudah@gmail.com
Junaid07@ymail.com
as.jameel@outlook.com
தபால் : கல்குடா மஜ்லிஸ் ஷுரா எஸ்.எம்.ரி ஹாஜியார் வீதி ஓட்டமாவடி 01 (30420)

LEAVE A REPLY