தாருல் அதரின் அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாடு: பெரும் திரளான மக்கள் பங்கேற்பு

0
435

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாடு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் (குட்வின் சந்தியில்) இடம்பெற்றது.

மேற்படி அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாட்டில் மார்க்கப் பிரச்சாரகர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.அஸ்ஹர் (மின்ஹாஜி) ‘இஸ்லாத்தில் துழைந்த அத்வைதம்’ எனும் தலைப்பிலும், பிரபல மார்க்கப் பிரச்சாரகர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.அப்துல் ஹமீத் (ஷரயி) ‘யார் இந்த ஷியாக்கள்?’ எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இங்கு தாருல் அதர்அத்தஅவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸாரினால் 13 முக்கிய விடயங்கள் அடங்கிய அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதாக தாருல் அதர்அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் பெரும் திரளான இஸ்லாமிய பொது மக்கள் கலந்து கொண்டனர்.குறித்த மாநாட்டில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பழுலுல்லாஹ் பர்ஹான்-

7d27f410-3a71-4ac9-958d-79b82bc72403 7e928645-003f-483a-8e98-d4eee9f60f21 46d4d515-478e-4cf9-a1aa-9dbc6ee8d269 224c54c1-2c05-4789-b614-5bbfe9f9c9e5 816d9ee5-daf0-4bbe-927f-eca243e12c00 1898a7bf-abd8-45b7-8d31-01cef19a602f d44ad4b0-7b8a-428b-9dfd-9a9d694079e2 de865306-0e53-4296-a41a-c1b75cc6d810 e79150ac-a46f-4367-9780-40cf4a6422c9 fbe1e9a9-eb37-4c1f-89b6-11ef8ee083ef

LEAVE A REPLY