அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாட்டின் தீர்மானங்கள்

0
308

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில்அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் (குட்வின் சந்தியில்) இடம்பெற்ற போது மாநாட்டின் இறுதியில் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸாரினால் 13 முக்கிய விடயங்கள் அடங்கியஅத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

அங்கு வாசிக்கப்பட்ட தீர்மானங்களில்,

1. எந்தவொரு தனிநபரோ, குடும்பமோ வழிதவறிய அத்வைத, ஷீயா கொள்கைகளை பின்பற்றியிருந்தால் அவற்றிலிருந்து மீண்டு கலிமாவை மொழிந்து அழ்ழாஹ்விடம் பாவ மன்னிப்பை இறைஞ்சுமாறு அழ்ழாஹ்வின் பெயரால் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

2. உலகின் எந்தவொரு பகுதியிலிருந்தும் ஷீயாக்களால் வழங்கப்படும் கல்வி, புலமைப்பரிசில், தொழிற்பயிற்சிகள் மற்றும் நிவாரணங்களை முஸ்லிம்களாகிய அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என இம்மாநாடு உங்களை மார்க்கத்தின் பெயரால் கேட்டுக் கொள்கிறது.

3. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் விசேட மாநாட்டில் வழங்கப்பட்ட பத்வாக்களுக்கு அமைய ‘வஹ்ததுல் வுஜுத்’ எனும் வழிதவறிய கொள்கையை ஏற்றோரும், அக்கொள்கையை சரி கண்டோரும், தூய இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து மதம் மாறியவர்கள் (முர்தத்) என்பதை இம்மாநாடு பிரகடனம் செய்கிறது.

4. ‘வஹ்ததுல் வுஜுத்’ எனும் வழிதவறிய கொள்கையை புத்துயிர் அளிக்கக்கூடிய வகையில் உதவி ஒத்தாசைகள் வழங்குதல், இவை சார்ந்த நிகழ்வுகளில் பங்குபற்றுதல் போன்றவற்றிலிருந்து முற்றாக விலகியிருக்குமாறு அனைவரையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. இக்கொள்கை சார்ந்த ஆண்கள், பெண்களை திருமணம் செய்தல், திருமணம் நடாத்தி வைத்தல், இவர்களால் அறுக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சிகளை உண்ணுதல் போன்றவற்றிலிருந்து ஈமானுள்ள ஒவ்வொருவரும் முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

6. ‘வஹ்ததுல் வுஜுத்’ எனும் வழிதவறிய கொள்கையை பிரச்சாரம் செய்கின்ற வணக்கஸ்தலங்களுக்குச் செல்லுதல், அவர்களின் இமாம்களைப் பின்பற்றித் தொழுதல், கந்தூரி உணவுகளைச் சாப்பிடுதல் போன்றவற்றிலிருந்து முற்றாக விலகியிருக்குமாறு அனைவரையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7. உலகெங்கும் இஸ்லாத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஷீயாக்களின் செயற்பாடுகளையும் ஊடுருவலையும் இலங்கைத் திருநாட்டிற்குள் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

8. வழிதவறிய அத்வைத, ஷீயா கொள்கைகளை பின்பற்றி மரணித்த பிரேதத்தை முஸ்லிம்கள் அடக்கப்படும் மையவாடிகளில் அடக்கம் செய்ய பள்ளிவாயல் நிருவாகங்கள் தடை விதிக்க வேண்டுமென ஊரிலுள்ள பள்ளிவாயல் நிருவாகங்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

9. வாக்குக்காக வழிதவறிய அத்வைதிகளிடமும் ஷீயாக்களிடமும் மண்டியிடுகின்ற அரசியல்வாதிகளை எதிர்வரும் தேர்தல் காலங்களில் புறக்கணிக்குமாறு பொதுமக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

10. இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து மதம் மாறிய அத்வைதிகளிடமும் ஷீயாக்களிடமும் திருட்டுத்தனமாக தொடர்புகளை பேணுகின்ற, அவர்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற பெயர்தாங்கிய உலமாக்களிடம் விழிப்பாக இருக்குமாறு பொதுமக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11. எமதூரில் ஜம்இய்யத்துல் உலமா சபையின் அதிகாரத்திற்குட்பட்ட சில பள்ளிவாயல்களில் ‘வஹ்ததுல் வுஜுத்’ எனும் வழிதவறிய கொள்கையை பிரச்சாரம் செய்கின்ற, பின்பற்றுகின்ற அத்வைத மௌலவிமார்கள் கடமைபுரிவதோடு பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை நிருவாகத்திலும் அத்வைதிகள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களை இப்பதவிகளிலிருந்து அகற்றுமாறு பள்ளிவாயல் நிருவாகங்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

12. அத்வைதிகள், ஷீயாக்களால் நிருவகிக்கப்படுகின்ற மத்ரஸாக்களில் தமது பிள்ளைகளை மார்க்கக் கல்வியை பயில அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

13. அத்வைதிகள், ஷீயாக்களுக்கு எதிராக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எமது அமைப்பு பூரண ஆதரவு வழங்கும் என்பதை இம்மாநாடு ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகிறது.

மேற்படி தீர்மானங்கள் தௌஹீதைப் பிரச்சாரம் செய்கின்ற அனைத்து அமைப்புகளுக்கும் பள்ளிவாயல்களுக்கும் அனுப்பி வைப்பதோடு ஊடகங்கள் வாயிலாகவும் இந்நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படும் என தாருல் அதர்அத்தஅவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸார் தெரிவித்தார்.

பழுலுல்லாஹ் பர்ஹான்

LEAVE A REPLY