ஆற்றில் பஸ் கவிழ்ந்து 37 பேர் பலி; இந்தியாவில் சம்பவம்

0
209

bus3இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த பஸ் குஜராத் மாநிலம் நவ்சரி என்ற இடத்திலிருந்து உகய் என்ற இடத்திற்கு சென்றது.

வழியில் சூரத் அருகேயுள்ள புர்ணா ஆறு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 37 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த பஸ்சில் 60 பேர் பயணம் செய்துள்ளனர். மீட்புகள் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

bus1

LEAVE A REPLY