விஷேட தேவையுடையோரும் இந்நாட்டுப் பிரஜைகள் அவர்களும் சமூகத்தில் ஏனையோரைப் போன்று சமமாக மதிக்கப்படல் வேண்டும்: ஷிப்லி பாறூக்

0
262

விஷேட தேவையுடையோர் சமூகத்தில் ஏனையோரைப் போன்று சமமாக மதிக்கப்படல் வேண்டும் ஏனெனில் அவர்களும் சமூகத்தின் அங்கத்தவர்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கிலங்கை வலதுகுறைந்தோர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஸாஹிரா விஷேட வலதுகுறைந்தோர் பாடசாலையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,
விஷேட தேவை உடையவர்களும் இந் நாட்டு பிரஜைகள் அவர்களும் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

இந்த நாட்டில் உள்ள பிரஜைகளுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து உரிமைகளும் மரியாதைகளும் அவர்களுக்கும் வழங்கப்படல் வேண்டும். சாதாரண ஓர் மனிதனை மதிப்பது போல் இவர்களையும் மதித்து அவர்கள் எவ்வாறான விடயங்களை கொண்டாடுகின்றார்களோ அதேபோல் இவர்களும் கொண்டாடி மகிழ வேண்டும்.

அது மட்டுமல்லாமல், அனைத்து விடயங்களிலும் அவர்கள் சமமாக மதிக்கப்படல் வேண்டும். அவர்களும் இந்த சமூகத்தின் அங்கத்தவர்கள் அவர்களுக்குள்ளே பல திறமைகள் இருக்கின்றன அதனை இனங்கண்டு அதனை வளர்க்க வேண்டும். அவர்களும் சுதந்திரமாக வாழவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் விஷேட தேவைகளுடைய பிள்ளைகளுக்கு இனிப்புக்கள் வழங்கி அவர்களுடன் சேர்ந்து 68வது சுதந்திரதின விழாவினை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

பழுலுல்லாஹ் பர்ஹான்-

LEAVE A REPLY