சுதந்திர திணத்தை முன்னிட்டு காத்தான்குடி முதியோர் இல்ல முதியவர்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கி பொதி வழங்கி வைப்பு

0
98

இலங்கை திரு நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் மொனாஷ் ஆங்கில அகடமி ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு நேற்று 4 வியாழக்கிழமை காத்தான்குடி முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் போது மொனாஷ் ஆங்கில அகடமியில் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளினால் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு பழங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் பிஸ்கட் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு முதியோர் இல்ல விடுதி மொனாஷ் ஆங்கில அகடமி மாணவர்களினால் துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பழுலுல்லாஹ் பர்ஹான்

LEAVE A REPLY