அருகிவரும் மூலிகையை பாதுகாக்க ஆயுர்வேத மூலிகைத் தோட்டம் ஆரம்பித்து வைப்பு

0
175

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் புதிதாக ஆயுர்வேத மூலிகைத் தோட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆயுர்வேத மூலிகைத் தோட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 04 நேற்று வியாழக்கிழமை மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் நலன்புரி சங்கத் தலைவர் எஸ்.தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது இவ் ஆயுர்வேத மூலிகைத் தோட்டத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.தவராஜா ஆரம்பித்து வைத்தார்.

இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த ஆயுர்வேத மூலிகைத் தோட்டத்தில் அருகிவரும் மூலிகை மரங்களான சித்தரத்தை, திப்பிலி, சதைகரைச்சான்,செங்கோட்டம்,ஆடாதோடை போன்றவை நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பழுலுல்லாஹ் பர்ஹான்

65538057-5264-4e74-bb70-20a794fa9e79 a3e446f1-e50c-46ae-a53c-f13e76867467 d2a7aa0c-864c-4c03-bc27-dd72c2f9fec5 f2354214-c3e0-4740-9086-f0413e2c476f fd6cb75a-5f9c-464b-804c-068d3e692544

LEAVE A REPLY