28 வருடங்களுக்குள் பிறந்த முதல் குழந்தையை வரவேற்கும் ஒஸ்டானா நகர மக்கள்

0
201

வடக்கு இத்தாலியில் உள்ள சிறிய நகரம் ஒன்று, 1980 இற்கு பிறகு பிறந்துள்ள முதல் குழந்தையின் வரவை மகிழ்வுடன் கொண்டாடி வருகிறது.

பீட் மாண்ட் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒஸ்டானா என்ற அந்த நகரின் மேயர், இந்த குழந்தையின் வரவு, தமது சிறு நகரின் ஒட்டுமொத்த சமூகத்தின் கனவு நனவானதை குறிப்பதாக தெரிவித்தார்.

கடந்த நூறு ஆண்டுகளில் அந்த பகுதியில் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.

கடந்த வாரம் டூரின் மருத்துவமனையில் பிறந்த குழந்தை பாப்லோவின் வருகையை அடுத்து அந்த நகரில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் இந்த எண்ணிக்கையில் பாதி பேர் மட்டுமே நிரந்தரமாக அந்நகரில் வசிப்பவர்கள் என்று லா ஸ்டாம்பா என்ற பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

நகர மேயர் இதுகுறித்து கூறுகையில்,1900களில் சுமார் 1000 பேர் வரை ஒஸ்டானா நகரில் வாழ்ந்தனர் என்றும் ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இந்நகரின் பிறப்பு வீதம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்தது என்றும் தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக 1975 ஆம் ஆண்டு முதல் இந்த நகரின் மக்கள் தொகை வீழ்ச்சி வேகமடைந்தது. 1976ஆம் ஆண்டு முதல் 1987 ஆண்டு வரை 17 குழந்தைகள் மட்டுமே இந்நகரில் பிறந்துள்ளனர்.

1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதைய புதுவரவு தான் பாப்லோ என்னும் இந்த ஆண்குழந்தை என்கிறார் அவர்.

புதிய வரவான பாப்லோவின் பெற்றோரான சில்வியா மற்றும் ஜோஸ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒஸ்டானாவை விட்டு வெளிநாடு செல்ல முடிவெடுத்திருந்தனர். ஆனால் அருகிலுள்ள ஒரு மலைப் பகுதியின் பராமரிப்புப் பணி ஒன்று அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த எண்ணத்தை அவர்கள் கைவிட்டனர்.

LEAVE A REPLY