அதிரடி சதம் அடித்த ஜெயவர்த்தனே!

0
215

ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் மாஸ்டர் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயவர்த்தனே அதிரடி சதம் அடித்துள்ளார்.

சகிட்டாரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ்- லிப்ரா லிஜென்ட்ஸ் அணிகள் மோதின. சகிட்டாரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு கில்கிறிஸ்ட் அணித்தலைவராக இருக்கிறார். லிப்ரா லிஜென்ட்ஸ் அணிக்கு கல்லிஸ் அணித்தலைவராக இருக்கிறார்.

கில்கிறிஸ்ட் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. கில்கிறிஸ்ட் மற்றும் ஜெயவர்தனே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள. கில்கிறிஸ்ட் 28 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 38 ஓட்டங்கள் சேர்த்தார்.

அடுத்த வந்த இம்ரான் பர்ஹத் 18 ஓட்டங்கள் சேர்த்தார். ஆனால் ஜெயவர்தனே அதிரடியாக விளையாடினார். அவர் 60 பந்தில் 10 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 124 ஓட்டங்கள் குவித்தார். இதனால் கில்கிறிஸ்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கல்லிஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் கில்கிறிஸ்ட் அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY