(வீடியோ) இந்த நாட்டில் மூன்று சுதந்திர தினங்கள் கொண்டாடப்பட வேண்டும்: அப்துர் ரஹ்மான்

0
368

எமது நாட்டிலே மூன்று சுதந்திர தினங்கள் மிக முக்கியமாக கொண்டாப்பட வேண்டும். அந்த வகையிலே எவ்வாறு எமது நாட்டினை வெளிநாட்டு ஆதிக்க சக்த்திகளிடம் இருந்து மீட்டெடுத்து அது வரலாற்றில் பதியப்பட்டு பெப்ரவரி நான்காம் திகதி சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகின்றதோ அதே போன்று உள்ளுர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இந்தநாடு பாதுகாக்கப்பட்ட சுதந்திரதினங்களும் கொண்டாடப்பட வேண்டும்.

அதிலே இரண்டாவதாக தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து இந்த நாடு மீட்டெடுக்கப்பட்டமை மார்ச் 18ம் திகதி இன்னுமொரு சுதந்திர தினமக கொண்டாடப்படும் அதே நேரத்தில் மூன்றாவதும் மற்றுமொரு முக்கியமான சுதந்திர தினம்தான் இந்தநாட்டிலே நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட சுதந்திர தினமாகிய ஜனவரி எட்டாம் திகதியாகும்.

இந்த நாட்டிலே நல்லாட்சி வேண்டும் என்பதற்காக இந்த நாட்டிலே நாம் எல்லோரும் சேர்ந்து ஜனவரி எட்டாம் திகதி கொண்டுவந்த ஆட்சி மாற்றத்தினை பாதுகாக்க வேண்டிய தேசிய கடமை எமது எல்லோருக்கும் இருக்கின்றது. நாம் உருவாக்கிய இந்த நல்லாட்சியானது எமது நாட்டின் வரலாற்றிலே பெரும் தேசிய விடுதலையாக பதியப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

வெள்ளைகாரனிடம் இருந்து இந்தநாட்டினை மீட்டெடுத்த விதத்தில் எமது முஸ்லிம் தலைவர்களைப்பற்றி நாம் இபோழுது மிகவும் சந்ததோசமாக பேசுகின்றோம். நம்மில் எவரும் அந்த தலைவர்களை காணவில்லை. ஆனால் அறிஞர் சித்திலெப்பை, மற்றும் டிபி.ஜாயா போன்றவர்களை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் சிங்கள சகோதரர்கள் கூட இன்னும் இந்தாநாட்டின் சுதந்திர தியாகிகள் என போற்றி புகழ்கின்றார்கள்.

அதே போன்றுதான் 1948ம் ஆண்டு எமக்கு கிடைத்த சுதந்திரத்தினை ஞாபகப்படுத்தி அறிஞர் சித்திலெப்பை , டிபி.ஜாயா போன்றவர்களை உரிமையுடன் பேசுகின்றோமோ அதே போன்றுதான் ஜனவரி எட்டம் திகதி இடம் பெற்ற ஆட்சி மாற்றத்திலும் முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் செய்த பங்களிப்பு என்ன என்பது பற்றி பதினைந்து வருடங்களுக்கு பிறகு எழுதப்படும் என்றால் எதனை எழுவது???? சுதந்திரம் உறுதியான பிறகு ஓடிவந்து சேர்ந்து விட்டோம் என்று எழுதுவதா? என்ற பாரிய கேள்வி என்னிடம் இருக்கின்றது.

முஸ்லிம் சமூகம் பங்களிப்புச் செய்தது என்பதானது வரலாற்றில் அழிக்க முடியாத உண்மையாக இருக்கும் அதே நேரத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதய சுத்தியுடன் பங்களிப்பு செய்ததா என்றால்? அதனை நினைத்து பார்க்கும் பொழுது மிகவும் கஸ்டமாக இருக்கின்றது என 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரை வீத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்த்திருந்த சுதந்திர தின நிகழ்வில் முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு உணர்ச்சி பூர்வமாக உரையாற்றினார்.

மேலும் பொறியலாளர் அப்துர ரஹ்மானின் உணர்ச்சிமிக்க உரையிலிருந்து,
மார்ச் 18ம் திகத்திக்கு முன் ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்கும் தற்பொழுது ஏற்றப்படுகின்ற தேசியக் கொடிக்கும் இடையிலான வேறுபாடு என்ன? தேசபற்று என்றால் என்ன? முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் எதற்காக ஊழல் மோசடி ஆணைகுழுவினை (FCID) தடை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்? இந்த நாட்டின் பொது நன்மையானது பாதுகாக்கபடும் பொழுதுதான் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் நன்மைகளும் பாதுகாக்கப்படுக்கின்றது.

நாட்டில் ஏற்படுத்தப்பட போகின்ற புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன? முஸ்லிம்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

போன்ற தலையங்களை மையமாக வைத்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் உரையாற்றிய உணர்ச்சி பூர்வமான உரையின் விரிவான காணொளியானது எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அஹமட் இர்ஸாட்

LEAVE A REPLY