வட்ஸ் அப்பில் இனி 100 அல்ல 256

0
261

வட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 100ல் இருந்து 256ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர்.

தங்களில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதற்காக பலரும் வட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஆண்டு சந்தா இல்லாமல் வட்ஸ் அப்பை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அடுத்த இன்ப அதிர்ச்சியாக வட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த புதிய வசதி தற்போது சோதனை அடிப்படையில் உள்ளதால், அனைத்து பயனர்களும் பெற முடியாது.

ஆன்ட்ராய்டு செல்பேசியில் இந்த புதிய பதிப்பை நேரடியாக பயன்படுத்த https://www.whatsapp.com/android/current/WhatsApp.apk என்ற முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

LEAVE A REPLY