அம்பாறை கரையோர பிரதேச வைத்தியசாலைகளில் விசேட வைத்தியத்துறை நிபுனர்களை நியமிக்க நடவடிக்கை

0
180

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்திலுள்ள கல்முனை வடக்கு ஆதாரத வைத்தியசாலை , கல்முனை அஷரப் ஞாபகர்த்த வைத்தியசாலை, அக்கரைப்பற்று ஆதாரத வைத்தியசாலை ஆகிய மூன்று வைத்தியசாலைகளின் விசேட வைத்தியத்துறை நிபுணர்களின் பற்றாக்குறைகளை போக்குவது தொடர்பான கூட்டம் இன்று சுகாதார அமைச்சரின் இணைப்பு செயலாலளர் சப்ராஸ் தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூன்று வைத்தியசாலைகளைக்கும் ஒன்றிணைத்த விசேட வைத்தியத்துறை நிபுனர்களை மிக விரைவாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

இதன்போது கூட்டத்துக்கு சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம், உதவி மருத்துவத்துறை பணிப்பாளர் லக்ஸ்மி சோமதுங்க மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கரையோர வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எம்.எம்.ஜபீர்

LEAVE A REPLY