நாங்க யாரு
++++++++++++

இலங்கையனாய் இருப்பதில்
எவ்வளவு சுகமுண்டு

பன்னிரண்டு போயாக்கும்
படுக்கலாம் எழும்பாமல்
சின்ன சின்ன கட்சி தொடங்கி
சீமானாய் ஆகலாம்
கண்ண மூடிக் காரோட்டி
காசு கொடுத்துத் தப்பலாம்
சொன்ன வாக்க மீறி விட்டு
சொறி என்று சொல்லலாம்

ஒரு SIMல் பொல்லு வைத்து
மறு சிம்மை எடுக்கலாம்
கருவாடு யாவாரமென
கஞ்சாவைக் கடத்தலாம்
தெரு நடுவில் மேடை இட்டு
தேவையின்றிக் கத்தலாம்
ஒரு நாள் ஒரு கட்சியாய்
ஒவ்வொரு நாளும் பாயலாம்

சுங்கத்தில் கைல பொத்தி
தங்கத்தை கடத்தலாம்
அங்கேதும் மாட்டி விட்டால்
அரசியலால் தப்பலாம்
சிங்கத்தின் ரத்தமென்று
சிலரை உசுப்பேத்தலாம்
இங்கிலீஸை இடை சொருகி
எடுப்பாகக் கதைக்கலாம்

தர்ஜுமாவைப் மேய்ந்து விட்டு
தம்பி முப்தி ஆகலாம்
அரிசிமாவில் அரபெழுதி
அனைத்தையும் சுகமாக்கலாம்
பரிசு தருவோம் என்று சொல்லி
பழைய நஜீசும் விற்கலாம்
உருசி இல்லா உணவையெல்லாம்
ஒன்றாய்க் ‘கொத்த’லாம்

இன்னும் இருக்கிறது
இங்குள்ள சிறப்புக்கள்
இந்த சுதந்திர தினத்தில்
இருந்தாலும் நம்மவர்
கொஞ்சம் திருந்தினால்
கொள்ளை இன்பம் வரும்

-Mohamed Nizous

LEAVE A REPLY