CSN நிறுவனத்தின் தலைவர் யோஷித்த என்பது உறுதி

0
93

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச CSN நிறுவனத்தின் தலைவர் என உறுதிபடுப்பட்ட எழுத்து மூல சாட்சியங்கள் பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளது.

CSN நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, யோஷித ராஜபக்ச CSN நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கிட்டதட்ட 5000 மின்னஞ்சல்கள் பாதுகாக்கப்பட்ட இறுவட்டு, அவர் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இறப்பர் முத்திரையுடனான கடிதங்கள், யோஷித ராஜபக்ச கையொப்பத்துடனான அதிகாரப்பூர்வ இறப்பர் முத்திரை, அவர் தலைவராக சில நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களின் மூலம் அவர் இந்த நிறுவனத்தின் தலைவர் என உறுதியாகியுள்ளது.

-ET-

LEAVE A REPLY