பாடசாலைச் சிறுவனைக் காணவில்லை

0
201

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணிக் கிராமத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலைச் சிறுவனைக் காணவில்லை என்று ஏறாவூர் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த களுவன்கேணி சிங்காரத் தோப்பு வீதியைச் சேர்ந்த சந்திரகுமார் சதீஸ்குமார் என்ற மாணவனே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY