68வது சுதந்திர தினத்தன்று காணமால் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம்

0
187

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணமால் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் போராட்டம் இலங்கையின் 68வது சுதந்திர தினத்தன்று 4.2.2016 நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் அருகாமையில் இடம்பெற்றது.

தாயக மக்களின் விடுதலையை வலியுறுத்தியும் மற்றும் காணாமல் போனோரை கண்டறியும் நோக்கோடும் மேற்கொள்ளப்பட்ட குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் போனோரின் குடும்ப உறவினர்கள் காணமால் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்திய வண்ணமும் ‘எனது பிள்ளை எனக்கு வேண்டும்’, ‘அரசே! எனது கணவரை விடுதலை செய்’ ‘தமிழர்களுக்கு ஒரு நியாயமா? முமற்றவர்களுக்கு வேறு நியாயமா?’ ‘அரசே! கண்டிக்கிறோம் உம்மை கண்டிக்கிறோம்’,அரசே! எங்கே எமது பிள்ளைகள் கண்டுபிடி கண்டுபிடி’ ,எனது பிள்ளை எனக்கு வேண்டும் தேடிக் கண்டுபிடித்து தாரும் போன்ற தமிழ் வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திய வண்ணமிருந்தனர்.

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் லயன் ஏ. செல்வேந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உருப்பினர் பா.அரியநேந்திரன்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பழுலுல்லாஹ் பர்ஹான்

4da4366a-a828-4b83-b8f3-14454a7c6d01 9da71279-812a-45cf-b7cc-b95ad0ddacd9 60e7fbde-d73a-4f1e-bb87-17b675dc7d4d 138880fe-2d88-40cb-a270-06785d3e2e0e aa327259-1904-4df8-975f-30f374d730b9 b6f76a6f-fd91-425e-8ae4-e8453e868247

LEAVE A REPLY