நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சுதந்திர தின நிகழ்வு

0
235

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தையொட்டி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின நிகழ்வு நேற்று (04.02.2016) காத்தான்குடியில் நடைபெற்றது.

காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய காரியாலய வளாகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் முதல் அம்சமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மானினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய சபையின் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர் தலைமையில் நடைபெற்றன.

இங்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.ஆர்.அஷ்செய்க் நஜா முஹம்மட் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான்ஆகியோர் விஷேட உரைகளை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி பிராந்திய சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களான ஏ.ஜி.எம்.ஹாறூன், எம்.ஏ.எச்.எம்.மிஹ்ழார், எம்.எச்.ஏ.முகம்மட் நஸீர், ஆகியோரும் எம்.எம். அமீர் அலி ஆசிரியர், எஸ்.எச்.எம்.பிர்தௌஸ்,எம்.எம்.முகம்மது ஜனூப், எஸ்.எம்.எம்.பஸீர் ஆசிரியர் உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏராளமான செயற்குழு உறுப்பினர்களும் பெண்கள் அணிப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அத்தோடு விஷேட அதிதிகளாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி அப்துல் காதர் பலாஹி ,முன்னாள் நகர சபை தலைவர் மர்சூக் அஹமட் லெவ்வை, முன்னாள் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதி மாஹிர் ஹாஜியார், ஐக்கிய தேசிய கட்சிப் பிரதிநிதி எம்.எச்.எம்.முஸ்தபா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி இல்மி அஹமட் லெவ்வை ஆகியோரும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

பழுலுல்லாஹ் பர்ஹான்

9b1c0d7b-a640-44b9-aecd-3d1212a6859e 9d2092fa-123a-425f-bdb4-87c71b733bc5 75b23f88-482c-466e-9d5f-bbd8614be9cf 530de33f-e4cc-480f-b4b2-bf036304348b 54097b03-f34f-476e-babd-c62bb8b58125 bd0e04d0-aff7-45d4-abba-a399b1db5cc7 c55e055a-24f8-41c3-b355-a99d099760d4

LEAVE A REPLY