68வது சுதந்திரதினத்தை முன்னிட்டு அல்-கிம்மா நிறுவனத்தினால் மாபெரும் இரத்ததான நிகழ்வு

0
205

எமது நாட்டின் 68வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை (04.02.2016) அல்-கிம்மா நிறுவனத்தினால் மாபெரும் இரத்ததான நிகழ்வும், வறிய நோயாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து, சமூக சேவையின் முன்னோடியாகத் திகழும் அல்-கிம்மா நிறுவனம் எமது நாட்டின் 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இரத்ததானம், மற்றும் தெரிவு செய்யப்பட்ட 68 நோயாளர்களுக்கான நிதியுதவி வழங்கள் நிகழ்வுகளை எம்.பி.சி.எஸ். வீதி, ஓட்டமாவடியில் அமைந்துள்ள நிறுவனத்தின் காரியாலயத்தில் நாளை காலை 7.30 மணி முதல் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடரில் அல்-கிம்மா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், தொண்டர்கள், வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேசத்தின் விளையாட்டுக்கழக இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் இவ்விரத்ததான நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதேசத்தில் உள்ள நிரந்தர நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு நோய் நிவாரண உதவித்தொகையாக மாதாந்தம் 1000 ரூபாய் வீதம் வழங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி அவர்களின் வழிகாட்டுதலுக்கமையவும், வைத்திய உதவிப்பிரிவின் பொறுப்பாளரும், நிறுவனத்தின் ஆலோசகருமான வைத்தியர் எம்.பி.எம். பிர்னாஸ் அவர்களின் பரிந்துரைக்கிணங்கவும் முதற்கட்டமாக 68 நோயாளர்களுக்கு இவ்வுதவித்தொகை வழங்கிவைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-வாழைச்சேனை நிருபர்

LEAVE A REPLY