கர்பலா அல்-மனார் பாடசாலையின் அவலநிலைமை :ஷிப்லி பாறூக் திடீர் விஜயம்

0
175

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலையத்துகுற்பட்ட தரம் 05 வரை கல்வி கற்பிக்கும் ஆரையம்பதி, கர்பலாநகர், மட்/மம/ கர்பலா அல்-மனார் பாடசாலையின் அவலநிலைமையை நேரில் சென்று பார்வையிட்டு அதனை மேன்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியளாலர் ஷிப்லி பாறூக் தெறிவித்தார்.

செவ்வாய்கிழமை (02.02.2016) அன்று மட்/மம/ கர்பலா அல்-மனார் பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு அங்குள்ள அவலநிலைமையை நேரில் பார்வையிட்டும், பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு ஆகியோருடன் கலந்துரையாடி பாடசாலையின் குறைகளையும் தேவைப்பாட்டினையும் கேட்டறிந்தார்.

இந் நிகழ்வில் அவர் கருத்து தெறிவிக்கையில், கர்பலா நகரில் அமைந்திருக்கும் இந்த பாடசாலையானது மிகவும் பின்தங்கிய நிலையில் எல்லைப் பகுதியில் அமையப்பெற்றுள்ளது, 1990 களின் பின்னர் இப் பாடசாலையை மற்றும் இப்பிரதேச மக்களை முன்னேற்றுவதற்கான நிலைமை காணப்பட்டவில்லை, ஆனால் தற்பொழுது இறைவனின் அருளால் பயங்கரவாத யுத்தம் நிறைவடைந்தது.

சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. இப்பாடசாலையானது நல்ல பௌதீக வளங்களை கொண்டிருந்தாலும் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதனை பாடசாலை அதிபர் எமக்கு சுட்டிக்காட்டியுள்ளார்கள், அதன் அடிப்படையில் முதல் கட்டமாக இப்பாடசாலையின் அபிவிருத்திக்கும், மாணவ மணிகளின் வளர்ச்சிக்குமாக, எனது மாகாணசபை 2016ம் ஆண்டின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கணணி இயந்திரம் ஒன்றினை வழங்குவதற்கு உறுதியளிக்கின்றேன்.

இவ்வாறாக நாங்கள் பல செயல்களை செய்வதன் நோக்கம் பாடசாலையின் பௌதீக வளங்களை மேன்படுத்துவதற்கு அப்பால் சென்று இக்கிராமத்தில் வருமை கோட்டின் கீழ் வாழுகின்ற ஒவ்வொரு பிள்ளைகளும் சிறந்த முறையில் கல்விகற்று முன்னேற்றமடைய வேண்டும். மேலும் இப்பிரதேசத்தின் கல்வித் தரம் அதிகரிப்பதற்காக எங்களால் முடிந்த முயற்சிகளையும், உதவிகளையும் மேற்கொள்வோம்.

கடந்த வருட புலமைப்பரிசீல் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை இப்பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளார்கள் இது பாராட்டத்தக்க ஒரு விடயம். இம்முறை புலமைப்பரிசீல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஒரு வருடத்திற்குப் போதுமான பயிற்சி வினா விடை தாள்கள் அடங்கிய தொகுப்பினை எனது சொந்த நிதியிலிருந்து வழங்குகின்றேன். மேலும் இம் மாணவர்கள் இம்முறை புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்து கல்வியில் முன்னேற்றமடைந்து இக் கிராமத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும் என வாழ்த்துகின்றேன்.

மேலும் இப்பாடசாலையின் சுற்று வட்டாரத்தினை பார்வையிட்ட அவர் சுனாமிக்குப் பின்னர் கட்டப்பட்ட கட்டிடம் பயன்படுத்தாமல் மிக மோசமான நிலையில் காணப்படுவதனை அறிந்து அதனை மீளவும் பயன்படுத்துவதற்குரிய ஆலோசனைகள் வழங்கியதுடன், அதனை பிரயோசனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதற்குரிய திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதற்கான தீர்வினை பெற்று தருவதாக தனது விஜயத்தின்போது கூறினார்.

5a4a553e-17a3-4785-8d53-1bc88e62a63a 8fdf89ec-8b03-4c17-ad27-b38b7efcdf2e 9fdb4cbe-b9be-4582-802b-78d932684ad2 19f6f39a-4a18-4db9-8e4a-0dc52e152108 79a503ae-ce26-4bd9-a173-0029a04d4ca6 4109afb9-f589-4d7c-86df-55bcf0a7c707 27748cc9-aef6-494f-9a1c-90eaddd322f6 cc6b5b01-0b94-4eb6-8c3d-f4f6845f2f9d d254ec61-aa87-4ce9-882c-eac1764f7a7b

LEAVE A REPLY