யோஷிதவின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்! பாதுகாப்பு அமைச்சு

0
234

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸவின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிபிசிக்கு வழங்கிய செவ்வியிலேயே அந்த அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

யோஷித ராஜபக்ஸ, கடற்படையில் சேவையாற்றிய காலத்தில், கடற்படை விதிமுறைகளை மீறி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டமை குறித்து தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், விசாரணை குறித்த அறிக்கையை விரைவில் சமர்பிக்குமாறு, கடற்படை தளபதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியில் யோஷித ராஜபக்ஸ 70க்கும் அதிகமான வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவற்றில் நாற்பது பயணங்களுக்கு மாத்திரமே கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கருணாசேன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு, அனுமதியின்றி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பிலேயே தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யோஷித ராஜபக்ஸ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், கடற்படை விதிமுறைகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY