குவைத், சஊதியிலிருந்து 200 பணிப்பெண்கள் திரும்பினர்

0
263

இலங்கையைச் சேர்ந்த சுமார் 200 பணிப் பெண்கள் இன்று (03) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

குவைத் மற்றும் சஊதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்று அங்கு பல்வேறு காரணங்களால் அநாதரவானோரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

குறித்த பெண்கள், அந்நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் முகாம்களில் அடைக்கலம் பெற்றிருந்தவர்கள் என பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வந்திறங்கிய பெண்கள் விசாரிக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு, தங்கள் சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அவசியமான உதவிகளை கட்டுநாயக்கா விமான நிலையத்திலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்து கொடுத்துள்ளது.

LEAVE A REPLY