நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற கருத்தை உறுதிபடுத்துவோம்: பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

0
161

நாட்டில் வாழும் அணைத்து இனத்தவர்களும் ஒரு தாய் மக்கள் என்பதை இன நல்லிணக்கம் மற்றும் சக வாழ்வினூடாக உறுதிப்படுத்துவோம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐ.தே.க. பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள சுதந்திர தின செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த காலங்களில் நாட்டில் இன நல்லிணக்கம் முற்றாக பாதிக்கப்பட்டு இன விரிசலொன்று ஏற்பட்டிருந்தது. இதனால் நாட்டில் பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. 30 வருட கொடிய யுத்தம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக பாதித்தது. அத்துடன் கடும்போக்கு குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக பாரிய அளவில் இனவாதம் பரப்பப்பட்டு நாடு மோசமாக பாதிக்கப்பட்டது.

அத்துடன் கடந்த அரசாங்கம் இன நல்லிணக்கத்தை சீர் குலைப்பவர்களுக்கு துணைபோனமையால் நாடு ஆதாள பாதாளத்துக்கு தள்ளப்பட்டது. பாதாளத்திலுள்ள நாட்டை மீட்டெடுத்து நாம் அணைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY