கிழக்கில் 68வது சுதந்திர நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

0
163

எதிர்வரும் 04-02-2016 திகதி இலங்கையில் நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கை திருநாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

மேற்படி சுதந்திர நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாணத்திலுள்ள ,மாவட்ட செயலகங்கள்,அரச திணைக்களங்கள்,அரச கூட்டுத்தாபணங்கள்,பிரதேச செயலகங்கள்,அரசியல் கட்சிகள்,வைத்தியசாலைகள்,பொலிஸ் நிலையங்கள்,சமூக மற்றும் சமய நிறுவனங்கள்,அரச தனியார் பாடசாலைகள்,அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள்,இந்து கோயில்,இஸ்லாமிய பள்ளிவாயல்,கிறிஸ்தவ தேவாலயம்,பௌத்த விகாரை போன்றவை ஏற்பாடு செய்துள்ளது.

இதிலும் குறிப்பாக சுதந்திர தினத்தென்று தேசிய கொடி ஏற்றுதல்,இரத்த தானம் வழங்குதல்,சிரமதானம்,விஷேட வணக்க வழிபாடுகள் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பழுலுல்லாஹ் பர்ஹான்

LEAVE A REPLY