தினக்குரல் தேசிய பத்திரிகை கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக நடாத்திய கல்விச் சங்கமம் நிகழ்வு

0
135

கொழும்பு-ஏசியன் மீடியா பப்ளிகேஷன் நிறுவனத்தின் தினக்குரல் தேசிய பத்திரிகை கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக கல்விச் சங்கமம் நிகழ்வை அண்மையில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா கல்லூரி மண்டபத்தில் நடாத்தியது.

தேசிய கையடக்க தொலைப்பேசிச் சேவை வழங்குனர்களான ஸ்ரீலங்கா ரெலிகோம் மொபிடல் நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த வழிநாடாத்திய அதிபர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரை கௌரவிக்கும் மேற்படி நிகழ்வு தினக்குரல் பத்திரிகையின் முகாமைத்துவ பணிப்பாளர் பொ.கேசவராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பீ.எஸ்.சார்ள்ஸ் மற்றும் அதிதிகளாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், மொபிடல் நிறுவனத்தின் பிரதிநிதிகள்,கல்விப் பணிப்பாளர்கள், சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிபு உள்ளிட்ட அதிதிகளினால் கடந்த ஆண்டு தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் சித்தி பெற்ற 389 மாணவர்கள் அவர்களுக்கு கற்பித்த வழிநாடாத்திய அதிபர்கள்,ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த கல்விச் சங்கமம் நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பழுலுல்லாஹ் பர்ஹான்

LEAVE A REPLY