சுதந்திர தினம் பற்றி
சொல்லுங்கள் என்று
சிலரைக் கேட்டேன்
சிரிப்பாய்ச் சொன்னார்.

கோல் பேஷ் திடலில்
கூட்டம் போட்டு
பீரங்கி வெடித்தலின்
பேரே சுதந்திரம்.
புதுனம் விரும்பிகள்
பொதுவாய்ச் சொன்னார்.

தொழிலாளி ஒருத்தன்
துடிப்புடன் கூறினான்
விடுமுறை ஒரு நாள்
விடுவதே சுதந்திரம்.

அமைச்சர் ஒருவர்
அமைதியாய்க் கூறினார்.
வெள்ளையர் இங்கு
வெளியேறிய பின்னால்
சொந்த நாட்டை
சுரண்டலே சுதந்திரம்.

மாணாக்கன் ஒருவன்
மனம் நொந்து கூறினான்.
சுதந்திரம் பற்றிச்
சோதனைத் தாளில்
வரலாற்றுப் பாடத்தில்
வாட்டி எடுக்கிறார்.

கொடிகளை நாட்டி
கொண்டாடல் சுதந்திரம்.
Press owner ஒருவர்
பிஸ்னஸாய்ச் சொன்னார்.

எல்லாச் செனலிலும்
இரண்டு மணி நேரம்
உப்புச் சப்பின்றி
ஒளி பரப்பு செய்வதே
சுதந்திர தினம் என்று
சொன்னார் சீரியல் ரசிகர்

சுணங்கிக் குளிக்கலாம்
சுகமாய்ப் படுக்கலாம்
உத்தியோகம் செய்வோரின்
புத்தியான கூற்று.

சுதந்திர தினத்தின்
சுத்தமான கருத்தை
அறிந்தவர் கூட
அமைதியாய் இருக்கிறார்
ஏனென்று கேட்டால்
எதிர்க்கேள்வி கேட்கிறார்
வெள்ளையர் போனபின்
கொள்ளையர் ஆளும்
சுதந்திர தினம் பற்றி
சொல்லவும் வேண்டுமா?

-MOHAMED NIZOUS

LEAVE A REPLY