மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களுக்கிடையில் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிரிக்கட் போட்டி

0
166

கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்தும் “கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ணம் 2016” “உடல் உள ஆரோக்கியம் வாழ் நாளை அதிகரிக்கும்” எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களுக்கிடையில் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுறு றுப் போட்டி நிகழ்ச்சிகள் 04.02.2016ம் திகதி தொடக்கம் 14.02.2016ம் திகதி வரை வாழைச்சேனை பிரதேச சபை பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலகம், பனிரெண்டு பிரதேச செயலகங்கள் மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள திணைக்களங்களும் பங்கு பற்றவுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்கள்  குறிப்பிடப்பட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்படும் என்பதுடன் உரிய நேரத்தில் பங்குபற்றாத அணிகள் தோல்வியடைந்ததாக கருதகப்பட்டு மற்றய அணி வெற்றி பெற்ற அணியாக கருதப்படும் என்று போட்டி நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர் பெனடிக் மோஸ் தெரிவித்தார்.

வாழைச்சேனை நிருபர்

LEAVE A REPLY