மக்கள் குறைகேட்கும் ஷிப்லி பாறூகின் நல்லதோர் செயற்பாடு!

0
171

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகினால் வீதிக்கு ஒருநாள் என்ற தொனிப்பொருளில் மக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடி சென்று கேட்டறிகின்ற நடமாடும் நிகழ்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு திங்கட்கிழமை (02.02.2016) அன்று காலை 09.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை அப்றார்நகர் 167B கிராம உத்தியோகஸ்தர் பிரிவில், நூராணியா மையவாடி வீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நல்ல செயற்திட்டத்திற்கு பிரதம அதிதியாக உதவி அரசாங்க அதிபர் திரு. கிரிதரன் அவர்களும், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஜனாப். அப்கர், காத்தான்குடி நகரசபை செயலாளர் திரு. சர்வேஸ்வரன், 167B கிராம உத்தியோகஸ்தர் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து சிறப்பித்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய இந்த நல்ல செயற்பாட்டினை பாராட்டி தங்களுடைய பூரண ஒத்துழைப்பையும் தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

இந்த நல்லதோர் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், இவ்வாறான சிறிய நிகழ்வுகளை நாங்கள் செய்வதன் நோக்கம் மக்கள் அரசியல் வாதிகளிடம் சென்று அலைந்து திரிவதை தடுப்பதற்காகவும், மக்களுடைய குறைகளை கண்டு அவர்களுடைய காலடிக்குச்சென்று நாங்கள் அவர்களுடைய குறைகளை நேரடியாக கண்டறிந்து அதற்கு எவ்வாறான தீர்வுகளை கொடுக்க முடியும் என்பதற்கான ஒரு முன்னோடி திட்டமாகத்தான் நாங்கள் இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

தாய்மார்கள், இளைஞர் யுவதிகள் என்று அவர்களுடைய பிரச்சினைகளை எங்களிடம் கொண்டு வருகின்றபோது அதனை உணர்வுரீதியாக உணர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எமக்கு கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இவ்வாறான கள விஜயங்களை மேற்கொள்கின்றபோது மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் அவர்களுடைய வசதிவாய்ப்புகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நேரடியாக பார்கின்றபோது உண்மையில் மிகக்கவலையாக இருக்கின்றது. அம்மக்களுக்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்வுரீதியாக தோன்றுகின்றது.

அந்த வகையில் முதற்கட்டமாக மக்களிடம் குறைகளை கேட்டறியும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து இப்பிரதேசத்தில் இருக்கின்ற வீடுகளுக்கு சென்று அவர்களுடைய நிலைமைகளை கேட்டறிய இருக்கின்றோம். அரசாங்க ரீதியாகவும், தனியார் ரீதியாகவும் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் தங்களால் முடிந்த உதவிகளை இம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க தயாராக இருக்கின்றோம்.

எதிர்காலத்தில் அரசியல் தலைமைத்துவங்கள் மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து செயற்படுகின்றவர்களாக இருக்க வேண்டும். இது ஓர் முன்னோடித்திட்டமாக அமையவேண்டும் என்ற வகையில் இவ்வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். அந்தவகையில் இப்பிரதேசத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய பிரச்சினைகளை முன்வைபதனூடாக எங்களால் முடிந்தளவு தீர்வுகளை பெற்றுத்தர முடியும் சில பிரச்சினைகளுக்கு காலம் தாழ்த்தியாவது தீர்வை பெற்றுத்தர முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என தனது உரையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY