என்னுடைய கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவியது யார்? கூறுகிறார் கோஹ்லி

0
249

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் மூன்று ஆட்டங்களிலும் முறையே 90 ஓட்டங்கள், 59 ஓட்டங்கள், 50 ஓட்டங்கள் வீதம் எடுத்து அவுஸ்திரேலியாவை சிதறடித்த இந்திய துணை தலைவர் விராட் கோஹ்லி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இரு நாடுகள் இடையிலான 20 ஓவர் தொடர் ஒன்றில் மூன்று அரைசதங்கள் கண்ட ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையையும் கோஹ்லி படைத்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய கிரிக்கெட் வளர்ச்சிக்கு சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனை உதவியாக இருந்தது என்று கோஹ்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் டெண்டுல்கரால்தான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். தனது தாய் நாட்டிற்காக அவர் செய்த பணி என்னை ஈர்த்தது.

அதே சூழ்நிலை கனவோடு நான் வாழ்ந்தேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கும்போது அவருடன் வீரர்கள் அறையில் இருந்தது பெரிய அதிர்ஷ்டம். என்னுடைய ஆட்டம் திறம்பட இருக்க வேண்டும் என அவர் சில ஆட்ட நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்து உதவி செய்தார் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY