பாடசாலைக்கு நிழற்பட பிரதி இயந்திரம் கையளிப்பு

0
137

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திலுள்ள மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு திங்கட்கிழமை விஜயம் செய்த கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் அப்பாடசாலையின் நீண்ட காலத் தேவையாக இருந்த நிழற்படப் பிரதி இயந்திரத்தைக் பாடசாலை நிருவாகத்திடம் கையளித்தார்.

பாடசாலை அதிபர் ஐ. சசிகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தியோருக்கான சாதனையாளர் பாராட்டும் இடம்பெற்றது.

கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி. சிவகுரு, உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். யோகராஜா, உட்பட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY