துவிச்சக்கர வண்டி பாதுகாப்புக் கொட்டில் கையளிப்பு!

0
146

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட, துவிச்சக்கர வண்டிகளைப் பாதுகாக்கும் பாதுகாப்புக் கொட்டிலை மாணவர்களுக்கு கையளிக்கும் வைபவம் கடந்த 26 ஆம் திகதி மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி இளைஞர் சேவை அதிகாரி பி.எம்.றியாத் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில், கிராமிய பொருளாதார விவகார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இவ்வைபவத்தில் கௌரவ அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.என்.எம்.நைரூஸ், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, ஓட்டமாவடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.மீராசாஹிப், கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலந்த பண்டார, மற்றும் விசேட அதிதிகளாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி கலாராணி ஜேசுதாஸன், மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல். அபுல்ஹசன், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.எம்.சாஹிர்

3f14b305-b3e0-4ad7-bfcb-5eef90290f15 65314322-d8a0-4338-9156-7694905bcaaf a796a359-ceb5-4f43-8c8a-88d31f6f870f

LEAVE A REPLY