காட்டுத்தீயாய் பரவும் ஜிகா வைரஸ்: சர்வதேச அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்

0
181

எபோலா வைரசை தொடர்ந்து தற்போது சர்வதேச நாடுகளை ஜிகா வைரஸ் பெரும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் ஆளாகியிருப்பதாக மதிப்பிடபட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO), ஜிகா வைரஸ் குறித்தும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அவசர கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்தது.

கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிகாரிகள், ஜிகா வைரஸ் பரவலை அசாதரணமான நிகழ்வு என்று குறிப்பிட்டு, பல நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை அறிவிப்பதாக தெரிவித்தனர். மேலும், ஜிகா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறும் உலக சுகாதார நிறுவன உயர் அதிகாரிகள் அறிவுருத்தியுள்ளனர்.

LEAVE A REPLY