சரணடைந்த இரு பிக்குகளும் விளக்கமறியலில்

0
116

அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பொலிஸில் சரணடைந்த இரு பிக்குகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (01) சிஹல ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் எனக் கூறப்படும் மாகல்கந்தே சுதந்த மற்றும் படல்குபுரே அரியஷாந்த ஆகிய இரு துறவிகளே இவ்வாறு சரணடைந்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

(அத தெரண)

LEAVE A REPLY