பாலமுனையில் நூல் வெளியீட்டு விழா

0
180

பாலமுனை கலாசார அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பாலமுனை முபீத் இன் உடைந்த கால்கள் (நவீன குறுங்காவியம் நெடுங்கவிதை) நூல் வெளியீட்டு விழா (2016.01.31) நேற்று பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அதிபர் எஸ்.எம்.எம் ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதாரப் பிரதி அமைச்சர் பைசல் காசீம் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் சிறப்பு அதிதியாகவும், விசேட அதிதிகளாக அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே அதிசயராஜ் மற்றும் ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் ரீ. கஜேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது நூல் வெளியீட்டுரையை உதவிக் கல்விப் பணிப்பாளரும் கவிஞருமான பஸ்மில் ஏ கபூர் நிகழ்த்தினார். நூலின் முதற் பிரதியை கல்முனை ஹபீப் வங்கியின் முகாமையாளர் ஏ.எல் அன்வர்தீனுக்கு பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி பாலமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்களும் இந்நிகழ்வில் அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-றியாஸ் ஆதம்

LEAVE A REPLY