இரு வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கள்

0
269

கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள சமூகசேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப்பணியின் தொடரில் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் மற்றும் மட்/மம/ஓட்டமாவடி தேசிய பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் இரு வறிய மாணவர்களுக்கான ரூபா 1500 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பை அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலையின் அதிபரும், கோறளைப்பற்று மேற்கு கோட்டப்பாடசாலைகளின் சுற்றாடல் ஆணையாருமான ஜனாப். எம்.எல்.எம். பைசல் ஆசிரியரின் வேண்டுகோளுக்கினங்க கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஜனாப் .எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலையின் அதிபரும், கோறளைப்பற்று மேற்கு கோட்டப்பாடசாலைகளின் சுற்றாடல் ஆணையாருமான ஜனாப். எம்.எல்.எம். பைசல் ஆசிரியர் ஆகியோரினால் இரு மாணவர்களுக்கும் 2016.02.01ஆந்திகதி திங்கட்கிழமை அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY