மியான்மரில் புதிய ஆட்சியை தொடங்கியது ஆங் சான் சூகி தலைமையிலான அரசு

0
129

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்றது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் ராணுவ ஆதரவு பெற்ற ஐக்கிய ஒருமைப்பாடு மற்றும் மேம்பாட்டுக் கட்சி (யுஎஸ்டிபி) ஆட்சி நடத்தி வந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மியான்மரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

ராணுவத்தின் சார்பில் போட்டியிட்ட மேம்பாட்டு கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி கண்டாலும் நாட்டின் அதிகாரம் பெரும்பகுதி ராணுவ தளபதி மின் ஆங் ஹெலாங், அதிபர் தெய்ன்சீன் ஆகியோரிடம்தான் இன்னும் இருக்கிறது.

இதனையடுத்து சுமூகமான ஆட்சி மாற்றத்திற்கு வழிவகை செய்யும் பொருட்டு ராணுவ தளபதி மற்றும் அதிபரை ஆங் சான் சூகி இருமுறை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஆட்சியை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு ஆங் சான் சூகி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், மியான்மரில் ஆன் சாங் சூகி தலைமையிலான புதிய அரசின் பாராளுமன்ற அமர்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஆன் சாங் சூகி உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதிய பாராளுமன்றத்திற்கு புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டிய பணி முதலில் உள்ளது.

LEAVE A REPLY