ஞானசார கைது விவகாரம்; இரு பிக்குகள் பொலிஸில் சரண் – மேலும் அறுவர் நாளை சரணடைவர்

0
161

அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக கூறப்படும் மேலும் இரு பிக்குகள் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

இன்று (01) மாலை சிஹல ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் எனக் கூறப்படும் மாகல்கந்தே சுதந்த மற்றும் படல்குபுரே அரியஷாந்த ஆகிய இரு துறவிகளே இவ்வாறு சரணடைந்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட, மாகல்கந்தே சுதந்த தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் உள்நோக்கம் தான் உள்ளிட்ட குழுவினருக்கு இருக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவலையடைவதாகவும், எனினும் சட்டத்தை மதித்தே பொலிஸில் சரணடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அறுவர் நாளை பொலிஸில் சரணடையவுள்ளதாகவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

(அத தெரண)

LEAVE A REPLY