காத்தான்குடி தள வைத்தியசாலையில் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிப்பு: வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர்

0
179

மட்டக்களப்பு, காத்தான்குடி தள வைத்தியசாலையில் பொதுமக்களின் நிதியுதவியுடன் சுமார் 5 மில்லியன் ரூபா செலவில் செய்து முடிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அடுத்த இருவாரங்களில் நோயாளர்கள் நலனுக்காக கையளிக்கப்படும் என காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர் திங்களன்று (01.02.2016) தெரிவித்தார்.

இரத்த வங்கி, உளநலப் பிரிவு என்பன அடுத்த இருவாரங்களுக்குள் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு நோயாளர்களின் நலனுக்காக செயற்படத் துவங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, காத்தான்குடி தள வைத்தியசாலையில் பால்நிலை சார்ந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கான பிரிவொன்றும் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவை விஸ்தரிப்பதற்காக சுமார் 6.4 மில்லியன் ரூபாய் செலவுத் தொகையை கிழக்கு மாகாண சபை வழங்குவதாக ஒப்புதலித்துள்ளது.

இதேவேளை, காத்தான்குடி தள வைத்தியசாலையில் அடுக்குமாடித் தூக்கி (நுடநஎயவழசள) நிர்மாணிப்பு வேலைத் திட்டத்திற்காக சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதின் பேரில் சுமார் 100.4 மில்லியன் ரூபாய்களை அந்த அமைச்சிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொது மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்வதற்காக பொதுமக்களே முன்வந்து 5 மில்லியன் ரூபாய்களை தந்து உதவியிருப்பதைப் பாராட்டிய வைத்திய அத்தியட்சகர், கிழக்கு மாகாண சபை மற்றும் மத்திய சுகாதார அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் கிடைத்ததும் காத்தான்குடி தள வைத்தியசாலை மேலும் நவீன வைத்திய வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

LEAVE A REPLY