யோஷிதவுக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு

0
262

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் ஐவருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பணச் சலவைக் குற்றத்தில் ஈடுபட்டமை, போலி ஆவணங்கள் தயாரித்தமை, நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டமை, சுங்கச் சட்டத்தை மீறியமை, நிறுவன சட்டங்களை மீறியமை மற்றும் தவறான நிதி கையாளுகை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

-ET-

LEAVE A REPLY