(Poem) தெளிவு பெறக் கேட்கின்றேன்

0
178

hqdefaultஅறிஞர் பீஜே,

அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் பேச்சால்
உண்மை இஸ்லாத்தை
தெரிந்த ஒருத்தன்
தெளிவடையக் கேட்கிறேன்.

என்ன கேள்விக்கும்
‘இனிய மார்க்கத்தில்’
தன்னந் தனியாய்
தரமாய் பதில் கொடுத்தீர்.

ஒரு சில ஹதீஸ்களில்
உள்ள விடயங்களை
சரியாக விளக்க
சாத்தியமின்மையால்
இருந்தது உங்களுக்கு
இரண்டே வழிகள்.

எனக்கு விளங்கல்ல
என்று சொல்வது
அல்லது ஹதீஸை
அப்படியே மறுப்பது.

இரண்டாவது வழியை
எடுத்துக் கொண்டதால்
புனித மார்க்கத்தில்
புதிய கொள்கை எனும்
ஆபத்தான நிலைக்கு
அத்திவாரம் போடுகிறீர்.

எனகுத் தெரியாது
என்று கூறுவதால்
யாரும் – ஏன் இறைவன் கூட
ஏதும் கேட்கான்.

ஆனால் நீங்கள்
அறி முகப் படுத்திய
இந்தக் கொள்கையில்
இருக்கின்ற ஆபத்தை
சிந்தித்துப் பார்ப்பீர்.
சில காலம் போன பின்
நீங்களே ஏற்ற
நேர்த்தியான ஹதீஸை
இன்னொரு கூட்டம்
ஏற்காது போனால்
அந்தப் பாவமும்
ஆரைச் சேரும்?

இந்த ஹதீஸ்களை
ஏற்றுக் கொண்டேதான்
பதினான்கு நூற்றாண்டாய்
பரவுகிறது இஸ்லாம்.

இஸ்லாமிய உலகில்
எல்லோரும் சேர்ந்து
ஏற்றுக் கொண்டதை
இன்று மறுப்பதால்
நன்மை உண்டா
நபிகளார் உண்மையில்
அந்த விடயத்தை
அறிவித்து இருந்தால்
இறைவனின் கேள்விக்கு
என்ன பதில் சொல்வீர்.

உங்களைப் பற்றி
உயர்வாய்க் கருதும்
சாதாரண ஒருவன்
சத்தியம் விளங்க
எழுதும் மடல் இது
இதற்கு சில பேர்
கெட்ட வார்த்தையால்
திட்டலாம் இருந்தும்
சரியான வழியை
புரிகின்ற நோக்கில்
அழகான பதில் தருவிர்
ஆத்திரம் கொள்ளாதீர்.

Mohamed Nizous-

LEAVE A REPLY