மைக்றோன் 20 இற்கும் குறைந்த பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் முற்றிலும் தடை

0
198

மைக்றோன் 20 இற்கும் குறைந்த எடையுடைய பொலித்தீன் பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று (01) முதல் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தை மீறுவோருக்கு 10,000 ரூபா அபராதமும் இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி குறிப்பிட்டுள்ளார்.

நாளொன்றுக்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் சுமார் மூன்று வருடங்களில் பாரிய அளவில் சுற்று சூழலில் சேர்க்கப்படுவதால் சூழல் மாசடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக இன்று முதல் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த சுற்றவளைப்புக்களின் போது மைக்றோன் 20 இற்கும் குறைந்த எடையுடைய பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை செய்வோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய சுற்றாடல் பாதுகாப்பு சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி குறிப்பிட்டுள்ளார்.

-NF-

LEAVE A REPLY