குறைந்த இன்னிங்சில் 50 சிக்சர்கள்! புதிய சாதனை படைத்த ஆண்டர்சன்

0
171

நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 50 சிக்சர்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றது.

இதில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் ஆக்லாந்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

இந்த போட்டியில் கோரி ஆண்டர்சன் மூன்று சிக்சர்கள் அடித்தார், இதன் மூலம் 33 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 51 சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரசல் 42 இன்னிங்ஸ்களில் 50 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

LEAVE A REPLY