ஞானசார தேரர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவில்லை: நீதவான் எச்சரிக்கை

0
346

இன்றைய வழக்கு விசாரணைகளுக்கு ஞானசார தேரர் ஏன் முன்னிலைப்படுத்தவில்லையென கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அடுத்த விசாரணையின் போது ஞானசார தேரர் கட்டாயம் முன்னிலையாக வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்தப்படவில்லை. இதன் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2014 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கொம்பனித்தெரு நிபோன் ஹோட்டலில் ஜாதிகபல சேனா அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, பலவந்தமாக பிரவேசித்து அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரரை அச்சுறுத்தியமை, புனித குர்ஆனை இழிவுபடுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றன.

-ET-

LEAVE A REPLY