சிரியாவின் முற்றுகை நகரில் பட்டினியால் 16 பேர் மரணம்

0
190

சிரியாவில் அரச படையின் முற்றுகையில் இருக்கும் மதயா நகருக்கு ஐ.நா. உதவிகள் அடைந்த பின்னரும் 16 பேர் பட்டினியால் இறந்திருப்பதாக எல்லைகள் அற்ற மருத்துவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதில் மேலும் 33 பேர் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாக மேற்படி தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போதைய நிலைமை முற்றாக ஏற்க முடியாத சூழலில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் குறித்த தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் பிரைஸ் டேலா விக்னே, மக்கள் வாரங்கள் கடப்பதற்குள் வெளியேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வருட இறுதிக் காலத்தில் இந்த நகரில் பட்டினியால் 30 பேர் பலியாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் கடந்த ஜனவரி ஆரம்பித்தில் உணவு மற்றும் உதவிகளை ஏற்றிய வாகனங்கள் மதாய நகருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இங்கு 40,000 வரையிலானவர்கள் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

டமஸ்கஸில் இருந்து வடகிழக்காக 25 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு மலைப்பிதேசமான மதயா நகரை அரச படையினர் மற்றும் அதன் கூட்டணியான லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு கடந்த ஆறு மாதங்களாக முற்றுகையில் வைத்துள்ளது.

LEAVE A REPLY