ஜனாதிபதி ஆணைக்குழு இன்று சிரந்திக்கு அழைப்பு!

0
216

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்‌ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இன்று (01)பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அவர் அழைக்கப்படவுள்ளார்.

தனது ஊடகச் செயலாளருக்குஆடம்பர வீடொன்றை குறைந்த பெறுமதிக்கு வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கிய உத்தரவு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவே சிராந்தி ராஜபக்ஷ அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தவகலை பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லேசில் த சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள குறித்த வீடு ரூபா 5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதன் சரியான பெறுமதி 55 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

LEAVE A REPLY